வன்முறையற்ற ஒரு கிரிக்கெட்டரின் எதிர்பார்ப்புகள்
சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஆசை
ஒரு மட்டையைக் கொடுத்து
பந்தை அடிக்க சொன்னார்கள்
வன்முறையில் விருப்பம் இல்லாததால்
வேண்டாம் என்று விட்டு விட்டேன்
எப்போதாவது ஆசையெழும் போது
கிரிக்கெட் மேட்சுகள் பார்க்கிறேன்
பந்தை அடிக்க முடியாத அளவுக்கு
பௌலர்கள் வீசும் போது மகிழ்கிறேன்
அடிபட்ட பந்தைக் கேட்ச் பிடித்தால் போதும்
ஆறுதலாய்ப் பிடித்தவரை
திரையென்று பார்க்காமலும் முத்தமிடுகிறேன்
பிள்ளைகள் விளையாடச் செல்லும் போது
பந்துக்கு வலிக்காமல் அடிக்க வேண்டும் என்கிறேன்
பிள்ளைகள் விநோதமாகப் பார்க்கிறார்கள்
நீங்களாவது சொல்லுங்கள்
வன்முறையில் என்ன இருக்கிறது என்று
போரும் சிக்ஸ்மாக அடிக்கத் துடிக்கிறார்கள்
*****
No comments:
Post a Comment