நாற்றமெடுப்பது நல்லதொரு சேவை
திறக்க முடியவில்லை நாறுகிறது
நாறுகிறது என்பதற்காக திறக்காமல்
இருப்பதெப்படி
திறந்து அதனுள் வைக்காமல்
இருப்பதெப்படி
வைத்ததை எடுக்காமல் இருப்பதெப்படி
நாற்றத்தையும் பதப்படுத்தி
வைக்கும்
சேவை பாராட்டிற்குரியது
பல மாதங்களுக்கு முன்பு வைத்த
பசுங்கன்றின் சாணியை ஒத்த
ஊறுகாய்
பல வாரங்களுக்கு முன்பு வைத்த
குருடாயிலை ஒத்த வற்றல் குழம்பு
பல நாட்களுக்கு முன்பு வைத்த
பனி வண்ணம் ஒத்த கவிச்சை
வாசம் வீசும் தயிர்
பல மணி நேரங்களுக்கு முன்பு
வைத்த
பொங்கி வழியும் கள்ளை ஒத்த
இட்டிலி மாவு
எப்போதோ வைத்த
டொக்கு விழுந்து கிழடாகி
விட்ட மாதுளை
கருவாடாகி விட்ட திராட்சைகள்
பழுப்பேறி புழுத்த விட்ட
ஆப்பிள்கள்
நாறுவதில் ஒன்றும் விஷேசமில்லை
அதன் கடமையை அது செய்கிறது
என் வீட்டு பிரிட்ஜ் மட்டுமா
எல்லார் வீட்டு பிரிட்ஜ்ம்
அப்படித்தான்
பர்சென்ட்டேஜ்கள் முன்னர்
பின்னர் இருக்கலாம்
என் வீட்டு பர்சேன்டேஜ் அதிகம்தான்
ப்ரிட்ஜ் நாறாவிட்டால் வீடேயன்றோ
நாறி விடும்
நாறாத பிரிட்ஜ்கள் இருந்தால்
சொல்லுங்கள்
கட்டாயம் வந்து பார்த்து
விட்டுப் போகணும்
*****
No comments:
Post a Comment