11 Sept 2026

நேற்றின் சாயல்

அலையும் குளுமை

கல்லெறிந்து விளையாடுபவரின்

பாதங்களையும்

குளிர்ந்த மனதோடு

தழுவி விட்டுச் செல்கிறது அலை

*****

சமத்துவக் கருப்பன்

எந்த மதமென்றும் தெரியவில்லை

எந்த ஜாதியென்றும் புரியவில்லை

விழுகின்ற நிழல் அத்தனையும் கருப்பு

*****

முடிவில் நனைதல்

எல்லாம் விற்ற பின்

மழையில் நனைந்தபடி

செல்கிறார்

குடைக்காரர்

*****

குட்டிக் கடல்

கடலோரத்தில்

சிறு குழி தோண்டி

அதில் நிரம்பிய

நீரைப் பார்த்துச் சொல்கிறாள்

அம்முக்குட்டி

“இதோ

என்

குட்டிக் கடல்!”

                                                                   *****

நேற்றின் சாயல்

முற்றத்தில் காயும்

ஈரத்துணியிலிருந்து சொட்டும்

ஒரு துளி நீரில்

நேற்று பெய்த மழையின் சாயல்

*****

No comments:

Post a Comment