10 Sept 2026

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு

வெறிச்சோடிக் கிடக்கும்

பாலை நிலத்தில்

வெந்து தணிந்து கொண்டிருக்கும்

கருவேலம் காட்டில்

பசுமையைத் தின்று தீர்த்த முட்கள்

தாகத்தை உறிஞ்சிக் குடித்த வெடிப்புகள்

துளி தேனின்றிப் போனாலும்

தேடும் இறகுகள் இருப்பதை எண்ணி

உற்சாகமாய்ப் பறக்கும்

ஒரு பட்டாம்பூச்சியின்

சிறகசைப்பின் விளைவோ என்னவோ

அதன் வண்ணச் சிறகுகளையொத்த

வானவில்லைத் தீட்டி

பல வண்ணப் பூக்களைப் பூக்க வைக்கும்

கருமையைத் திரட்டிக் கொண்டு

எங்கேயே திக்குத் தெரியாமல்

அல்லாடிய மேகம் ஒன்று திரும்பி வருகிறது

*****

No comments:

Post a Comment