10 Sept 2026

மறைந்து போகும் ஊதியம்

 

மறைந்து போகும் ஊதியம்

முப்பது ஆண்டுகளின்

இளமை தொலைந்த பிறகு

எதுவும் இல்லை என்றாகிறது

சந்தையின் நிச்சயமற்ற

விளையாட்டுகளில்

எல்லா எண்களும்

பூஜ்ஜியத்தை நோக்கிச் சென்று விட

முதுமையின் மீது

நடத்தப்பட்ட சூதாட்டமாகியிருந்தன

தவணை செலுத்திய கோப்புகள்

எஞ்சிய காலத்தின் வரைபடத்தின் மீது

அதிகாரத்தின் நாற்காலிகள்

வசதியாய் அமர்ந்திருக்க

அரிசிக்கும் பாலுக்கும்

கையேந்தும் நடுங்கும் கரங்களைப்

பகடைக் காய்கள் உருட்டுகின்றன

கௌரவமான தற்கொலைக்கான

தூக்குக் கயிற்றை

முடிச்சிட முடியாமல்

மரணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்க

துரதிர்ஷ்டம் பிடித்த ஊழியர்களிடமிருந்து

தள்ளியே நிற்கிறது பென்ஷன்

****

No comments:

Post a Comment