ஒன்றென்பது போல
சத்தமாய்ச் சண்டையிட்டவர்கள்
சமாதானமாகி விடுகிறார்கள்
சமாதானம் செய்து வைத்தவர்கள்
சண்டைக்காரர்களாகி விடுகிறார்கள்
சண்டையும்
சமாதானமும்
ஒன்றென்பது போல!
*****
கைவிடல்
தாத்தா பாட்டிப் போனார்கள்
முதியோர் இல்லம்!
அனாதையானது
அவர்கள் வாழ்ந்த
கிராமத்து இல்லம்!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment