ஓ பருவ காலங்களே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
வெயில் அதிகமென்றார்
அதனாலென்ன சர்பத் அதிகம் போட்டு வை
குளிர் அதிகமென்றார்
அதனாலென்ன டீ அதிகம் போட்டு வை
மழை அதிகமென்றார்
அதனாலென்ன வற்றல் குழம்பு அதிகம் செய்து வை
பனி அதிகமென்றார்
அதனாலென்ன வெண்பொங்கல் அதிகம் செய்து வை
எப்படிதான் இவரைச் சமாளிக்கிறீர்கள்
பருவங்களே பரவாயில்லை என்றார்
அப்படித்தான் போயாக வேண்டும்
வேறென்ன வழியிருக்கிறது
எப்படியோ சமாளித்துக் கொண்டால்
எல்லார்க்கும் நல்லது
பருவங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும்
கொஞ்சம் காலம் ஓடும் வரை இருந்து விட்டுப் போகட்டும்
பரோட்டாவும் சால்னாவும் எல்லா பருவங்களுக்கும் நல்லது
*****
No comments:
Post a Comment