சொர்க்கத்திற்குச் செல்ல அவ்வளவு ஆசை
சொர்க்கம் எப்படி இருக்கும்
அங்கு பர்கர் பீட்ஸா கிடைக்குமா
சில்லி சிக்கன் நூடுல்ஸாவது கிடைக்குமா
பத்து பதினைந்து பிளாட்டுகள் வாங்கிப் போட முடியுமா
ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் உண்டா இல்லையா
சர்க்கரை பிபிக்கு இலவச மாத்திரைகள் வழங்கப்படுமா
ஹோம் லோன் வட்டி எப்படி
கல்விக்கடன் வசதிகள் இம்.எம்.ஐ. வசதிகள் எப்படி
டெபிட் கிரெடிட் கார்டுகள் உண்டா
டெஸ்ட் ஒன்டே ட்வென்டி ட்வென்டி மேட்சுகள் உண்டா
மல்டி பிளெக்சுக்கு முன்பதிவு செய்ய வேண்டுமா
ஆக்சிடென்ட் கவரேஜ்கள் எப்படி
பென்சன் திட்டம் உண்டா
ஓட்டுரிமை உண்டா
ஓட்டுக்குப் பணம் வருவதுண்டா
பவர் கட் எப்படி
விலைவாசி பாதிப்பு உண்டா
5ஜி 6ஜி வந்து விட்டதா
தாத்தாவிடம் கேட்டால் எதுவும் தெரியாது என்கிறார்
சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகிறார்
புரியாத இடத்திற்குப் போக அவ்வளவு ஆசை
*****
No comments:
Post a Comment