4 Sept 2026

ஆடுகள் அளிக்கும் மன்னிப்பு

ஆடுகள் அளிக்கும் மன்னிப்பு

சாலையின் குறுக்கே வந்த

ஆட்டிற்காகக் கோபப்பட்ட போது

தன் இனத்தில் ஒன்றைக் கொன்று

மட்டன் பிரியாணியாக்கி

வயிறு முட்டச் சாப்பிட்டு

நெஞ்சு முட்ட குடித்து விட்டு

வேகமாக வாகனத்தை

ஓட்டி வந்ததற்காக

அடிபட்டு ஓரத்தில்

ரத்த சகதியில் விழுந்தும்

கோபப்படவில்லை அந்த ஆடு

*****

ரட்சகன்

காசேதான் கடவுளடா

என்றான் ஒருவன்

அந்தக் கடவுளையும்

தூக்கி எறிந்து விட்டு

தழுவிக் கொள்கிறான்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்

கடவுளைப் போல ஒருவன்

*****

நம்பிக்கை

விழுமோ

விழாதோ

விழும் என்ற நம்பிக்கையில்தான்

அமர்ந்திருக்கிறார்

பிச்சைக்காரர்

*****

No comments:

Post a Comment