ஓய்வின் பெரும்பொழுது
கணவர்
இறந்து விட்டார்
மகன்
வெளிநாடு போய் விட்டான்
மகள்
கட்டிக் கொண்டு போய் விட்டாள்
யாருமில்லாத
வீட்டில்
தொலைக்காட்சி
ஓடிக் கொண்டிருக்கிறது
யாதொரு
உறுத்தல் இல்லாமல்
நெடுந்தொடர்
பார்ப்பதில்
சுதந்திரமாகக்
கழிந்து கொண்டிருக்கிறது
அடிமைப்பட்டுக்
கிடந்த
பெண்ணொருத்தியின்
ஓய்வுக் காலம்
*****
போதாமைகள்
அரசியல்
தெரிந்த பெண்ணுக்குச்
சமையல்
தெரியவில்லை
சமையல்
தெரிந்த பெண்ணுக்கு
பரதநாட்டியம்
தெரியவில்லை
பரதநாட்டியம்
தெரிந்த பெண்ணுக்கு
பாண்டித்யம்
வரவில்லை
நீ மட்டுமென்ன
பெண்ணுரிமை
தெரிந்த அளவுக்கு
புருஷ
லட்சணம்போதவில்லை
*****
No comments:
Post a Comment