கால நாய் கடித்துச் செல்லும் எலும்புகள்
ஒரு நம்பிக்கை
ஓர் அவநம்பிக்கை
ஓர் அனுபவம்
எப்படியெல்லாமோ வாழ்க்கையை
மாற்றி விடுகிறது
பக்குவம் ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு
விடுகிறது
உணர்ச்சி ஒரு நாள் பக்குவப்பட்டு
விடுகிறது
கணிப்புகள் சிதறித் தூள்
தூளாகின்றன
எதைப் பற்றிக் கொள்வது
எதை நிராகரிப்பது
கருத்துகளை அடித்து நொறுக்கியபடி
பயணிக்க வைக்கின்ற கால வெளிக்குள்
உங்களை நீங்களே தடுத்து நிறுத்திக்
கொள்ள
தற்கொலை ஒரு பழிவாங்கலாக
இருக்கலாம்
ஒரு பாதி உண்மையின் மறுபாதி
என்னவென்றால்
கண்டு கொள்ளாமல்
பயணிப்பதால் பயணித்துக் கொண்டு
இருப்பதால்
ஏமாற்றங்களைப் பழிவாங்கலாம்
முடிவின் எல்லையில் புலனாகக்
கூடும்
கருத்துகள் போலிகள்
நம்பிக்கைகள் பாதி வேகாதவைகள்
அவநம்பிக்கைகள் அர்த்தமிழந்தவைகள்
அனுபவங்கள் தொக்கி நிற்பவைகள்
கண்டவை அனைத்தும் வேடிக்கைகள்
கேட்டவை அனைத்தும் நகைச்சுவைகள்
உணர்ந்தது அனைத்தும் விளையாட்டுகள்
உச்சியிலிருந்து தள்ளி விடப்படும்
போது
விழாமல் இருப்பது எப்படிச்
சாத்தியம்
விழுதலின் முடிவில் ஒரு சில
சுக்கல்கள்
கால நாய் கடித்துச் செல்ல
ஒரு சில எலும்புகள்
நாவினில் எச்சிலூற வேடிக்கை
பாருங்கள்
விழுவதெல்லாம் அமுதத் துளிகள்
*****
No comments:
Post a Comment