21 Oct 2022

கன்டெய்னர் கன்டென்ட்கள்

கன்டெய்னர் கன்டென்ட்கள்

எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள் என்கிறார்கள்.

என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அப்படி.

விசயங்களைக் கன்டெய்னர் கன்டெய்னராகக் கொண்டு வந்து தள்ளுகிறார்கள்.

நான்தான் அலுப்புப்பட்டுக் கொண்டு கால்வாசி கன்டெய்னர் அளவுக்குக் கூட எழுதுவதில்லை.

அதற்கே இப்படிக் கேட்கிறீர்கள்.

*****

பிடிவாதக்கார பப்ளிஷர்கள்

கண்டிப்பாக என்னுடைய புத்தகம் ஒன்றை வெளிக் கொண்டு வந்து விட வேண்டும் சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏனிந்த பிடிவாதம்?

பள்ளிக்கூட புத்தகத்தையே பிள்ளைகள் பாதிதான் படிக்கிறார்கள்.

தினத்தந்தி படிப்பவர்களே குறைந்து கொண்டு வருகிறார்கள்.

இப்படியெல்லாம் ஏதாவது செய்து விடுவார்கள் என்றுதான் டாக்டர்கள் படிக்க முடியாதபடி எழுதுகிறார்கள் போலும்.

*****

கவிஞன் என்றால் ஓசியில் நொட்ட வேண்டும்!

“நீங்க கவிதை எழுதறதா கேள்விப் பட்டேன்!” என்றார் வீட்டுக்கு என்னைத் தேடி வந்தவர்.

“ரொம்ப சந்தோசம்! என்னுடைய எந்தக் கவிதையைப் படித்திருக்கிறீர்கள்?” என்றேன்.

“அதில்ல சார்! எனக்கு ஓம், ஓம்ன்னு முடியுற மாதிரி ஒரு கவிதை எழுதித் தரணும் சார்!” என்றார்.

“எழுதிரலாம். பீஸ் பத்தாயிரம் ஆகும்.” என்றேன்.

அவ்வளவுதான், ஓம் ஒம் கவிதை கேட்டவர் எங்கே காணோம் என்று தேட வேண்டியதாகி விட்டது.

கவிஞன் என்றால் ஓசியில் நொட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

*****

டிப்ஸ் ப்ளீஸ்!

“சார்! ஷேர் டிப்ஸ் எதாச்சும்?”

“போடா அந்தப் பக்கம்! ஹோட்டலில் சாப்பிட்டால் சர்வருக்கே டிப்ஸ் கொடுக்குறதில்லடா நான்.”

இவனுங்க எல்லாம் பேங்க் பிக்சட் டெபாசிட் கண்ணுக்கே தெரியாத மாதிரி அல்லவா நடந்து கொள்கிறான்கள் மற்றும் கொல்கிறான்கள்.

என்னவோ இவனுங்கத்தான் உலகத்திலேயே பேங்க் பிக்சட் தரும் வட்டியை விட அதிகம் சம்பாதிக்கப் பிறந்த மாதிரி நடந்துக்கிறானுங்க.

அத்தோட விடுறானுங்களா? பண வீக்கத்தைத் தாண்டிச் சம்பாதிக்கணும்ங்றானுங்க. அரசாங்கமே முன்ன இருந்த பண சைஸை விட சின்னதாதானே பணத்தை அச்சடிக்குது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...