22 Oct 2022

நியாயம் என்பது ஒரு தத்துப்பித்துவம்

நியாயம் என்பது ஒரு தத்துப்பித்துவம்

நீங்க நடந்துக்குறது கொஞ்சம் கூட நியாயமே இல்ல சார்!

அப்படியா?

அப்படியேதான். அவுங்கவுங்க சுயநலத்துக்குத் தகுந்தபடி நடந்துக்கலன்னா அது கொஞ்சம் கூட நியாயம் இல்ல சார்.

*****

காம்யூவைப் படித்தல்

ஆல்பர் காம்யூவைப் படித்திருக்கிறீர்களா?

நான் ஏன் படிக்க வேண்டும்?

அவர் என்னைப் படித்திருக்கிறாரா?

*****

அ – நிறுவன வேலை

அவன் சோம்பேறியாக இருப்பதைப் பார்த்து விட்டு அவனுக்கு அ – நிறுவன வேலைதான் சரிபட்டு வரும் என்கிறார்கள்.

*****

மனதில் உறுதி வேண்டும்!

சில முடிவுகளில் உறுதியாக இருக்கும் போதுதான் சில காரியங்களைச் செய்ய முடிகிறது. குறிப்பாக இரண்டாவது கல்யாணம்.

*****

ஓர் ஓவரின் ஆறாவது பால்!

ஓவராகப் போகும் போது மனமகிழ்ச்சி இருக்காது. ஆம் போதைதான் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...