19 Oct 2022

ஒரு சொல்லில் இரு சூட்சமங்கள்

ஒரு சொல்லில் இரு சூட்சமங்கள்

தர்மம் என்று நம் மக்களிடம் பத்து பைசா வாங்குவதற்குள் நாக்கு பிரண்டு கெண்டை பிரண்டு விடும். சரளை இழுத்து விட்டால் அதற்குத் தர்மம் பொறுப்பில்லை.

மருத்துவம், மருந்து மாத்திரைகள் என்றால் கொட்டிக் கொடுப்பார்கள்.

சீட்டுப் போடவும் கத்தைக் கத்தையாய்க் கொடுப்பார்கள்.

தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டு வரிசையில் நின்று வாரிக் கொடுப்பார்கள்.

கல்யாண மாப்பிள்ளை என்றால், போதும் போதும் என்று சொன்னாலும் ஆசை அடங்காது கொட்டிக் கொடுப்பார்கள்.

தர்மம் நம் மக்களுக்குப் பிடிக்காத வார்த்தை.

தர்மம் போடுங்க சாமி என்று கேட்கும் மதியாதைக்கும் மதிப்புக்கும் உரிய திரு பிச்சைக்காரர் அவர்களின் திருவோட்டில் பைசா காசு விழாத ரகசியம் இதுவே.

ஔவையார் ‘அறம் செய விரும்பு’ என்று ஆத்திசூடியைத் தொடங்குவதன் சூட்சமமும் இதுவே.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...