பொன்னியின் செல்வனில் பார்த்திபன் கனவு
‘பொன்னியின் செல்வனை’ எடுப்பதென்றால்
(அதாவது படமாக – திரைப்படமாக) ரஜினி சாரை வைத்து வந்தியத்தேவனை எடுக்க வேண்டும் என்று
ஜெயலலிதா சொல்லியிருந்தார்.
ஜெயலலிதா மரணித்து விட்டதைச்
சாக்காக வைத்து மணிரத்னம் கார்த்தியை வைத்து எடுத்து விட்டார்.
சரிதான் போ என்று மணிரத்னத்திடம்
பெரிய பழவேட்டரையர் வேடத்தையாவது கொடுங்கள் என்று ரஜினி சார் கேட்டுப் பார்த்தார்.
பெரிய ஸ்டார் என்றால் பெரிய
பழவேட்டரையர் வேடம்தான் கொடுக்க வேண்டுமா என்று அதையும் மறுத்து விட்டார் மணிரத்னம்.
ரஜினி சார் எதுவும் கேட்காது இருந்தால் சின்ன பழவேட்டரையர் வேடத்தையாவது கொடுத்திருப்பார்
மணிரத்னம்.
சின்ன பழவேட்டரையர் வேடத்தில்
பார்த்திபனைப் பார்த்த போது அவர் குண்டக்க மண்டக்க பேசுவார் என எதிர்பார்த்தேன். என்
எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. இரண்டாவது பாகத்திலாவது என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறதா
எனப் பார்ப்போம்.
*****
No comments:
Post a Comment