13 Apr 2019

அரசியல்வாதியாக இருப்பது சாதாரணமில்லை!



            ஓர் அரசியல்வாதியாக இருப்பதைச் சாதாரணமாக நினைக்கிறார்களே இந்த பொதுசனங்கள்!
            இந்தப் பொதுசனங்கள் இருக்கிறார்களே!
            இவர்களால் கட்டுக்கட்டாகப், பெட்டிப் பெட்டியாகப் பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியுமா?
            ஒரு பிரச்சனை என்றால் அராஜகத்தை ஏவி விட்டு ரெளடித்தனம் பண்ணத் தெரியுமா?
            ஒரு கூட்டம் என்றால் இருநூறையும், முந்நூறையும் பிரியாணிப் பொட்டலம் குவார்ட்டர் சகிதம் கொடுத்து ஆட்களைத் திரட்ட முடியுமா?
            ஒரு லோடு லாரி ஆட்களுக்கு எவ்வளவு செலவாகும் என்ற கணக்குதான் புரியுமா?
            இன்றைக்கு ஒன்று பேசி, நாளைக்கு ஒன்று பேசி தான் குழம்பாமல் மற்றவர்களைக் குழப்ப முடியுமா?
            அவ்வளவு ரெய்டுகள், குற்றச்சாட்டுகள், வழக்குகள் வந்தாலும் இளம் வயதிலேயே மாரடைப்பு வராமல் கடைசி வரை நிலைத்து நின்று அவைகளிலிருந்து தப்பிக்க மாரடைப்பு வந்தது போல நடிக்கத்தாம் முடியுமா?
            நம்பி ஓட்டுப் போடுவார்களோ மாட்டார்களோ என்றெல்லாம் சந்தேகப்படாமல், குழம்பாமல் ஒட்டுக்கு நோட்டை வாரி இறைக்கத்தாம் முடியுமா?
            ஆகவே பொதுசனமே! புரிந்து கொள்! ஓர் அரசியல்வாதியாக இருப்பது சாதாரணமில்லை! மனிதசாதியில் அப்படியெல்லாம் ஒரு மனிதர் இருக்கவே முடியாது!
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...