தவறுதலாக
வந்த
அலைபேசி
அழைப்புக்காய்
அழுது
இருக்கிறீர்களா?
சக
மனிதர்களின் தொடர்பைத்
துண்டித்த
ஒருவன்
தொடர்பு
எல்லைக்கு அப்பால்
பேச
விழையும் வேட்கையைக்
கொஞ்சமேனும்
கரிசனத்தோடு
தீர்த்திருக்கிறீர்களா?
என்னிடம்
இருந்த ஒரு அலைபேசி
கடைசியாக
ஒரு முறை
எதிர்கொண்ட
தவறிய அழைப்பு
தற்கொலை
செய்த கொள்ளவிருந்த ஒருத்தியினுடையது
அதன்
பின் அதே எண்ணிலிருந்து
நிறைய
அழைப்புகள் வந்து
கேட்பதற்கு
ஒருவர் இருந்தால்
பூமிப்
பந்து சுருக்கில் தொங்காது
என்று
அலறிக் கொண்டேயிருந்தது
கொஞ்சம்
கேட்க முடிந்தால்
நிறையக்
காப்பாற்றலாம்
என்பது
என் ரிங் டோன் ஆனது
*****
No comments:
Post a Comment