அரசியல் பேசி விட்டாய் என்பதற்காக...
பிறந்த
குழந்தை அழுகிறது கேட்டாயா
வரிசையில்
நின்று ஆதார் எடுக்க வேண்டும்
என்பதற்காக
இருக்கலாம் என்றதற்காக
அரசியல்
பேசி விட்டாய் என்று
குழந்தைப்
பிறந்த மகிழ்ச்சியைப்
பகிர
கொடுக்க வந்த சாக்லேட்டைக்
கொடுக்காமல்
போனாய்
கொன்று
புதைக்கப் போகும்
செத்த
மனிதனுக்காக அழுகிறார்கள் கேட்டாயா
ஆதார்
எண் கேட்டால் இல்லையே
என்பதற்காக
இருக்கலாம் என்றதற்காக
மறுபடியும்
அரசியல் பேசி விட்டாய் என்று
துக்க
வீட்டில் கொடுக்க வந்த
தேநீரைக்
கொடுக்காமல் போனாய்
கருத்துச்
சொல்வதற்குக் கூட
என்
பனிரெண்டு இலக்க ஆதார் எண்ணைக் கேட்கலாமா
அதைத்தான்
நான் தேடிக் கொண்டு இருக்கிறேன்
என்ற
என் கருத்தை எப்படிப் சொல்வது என்று நீயே சொல்.
*****
No comments:
Post a Comment