1 Nov 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 11

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 11
            செங்காந்தள் அறிவுத் திருவிழா என்பது மாணவர்களை நோக்கிய மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சியாகும்.

            பதினோறாவது செங்காந்தள் அறிவுத் திருவிழா திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், பெரியகொத்தூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 29.10.2018 (திங்கள்) அன்று மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.
            ஒவ்வொரு கல்வியாண்டும் ஒவ்வொரு பள்ளியிலும் அறிவுத் திருவிழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பது செங்காந்தள் அறிவுத் திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.
            அந்நோக்கத்திற்கு இணங்க சென்ற கல்வியாண்டில் மூன்றாவது செங்காந்தள் அறிவுத் திருவிழா பெரியகொத்தூர் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இக்கல்வியாண்டிற்கான அறிவுத் திருவிழா பதினோறாவது செங்காந்தள் அறிவுத் திருவிழாவாக பெரியகொத்தூர் பள்ளியில் கொண்டாடப்பட்டது. அவ்வகையில் இவ்வறிவுத் திருவிழா பெரியகொத்தூர் பள்ளியில் இரண்டாவது முறையாக நடைபெறும் புத்தகக் கண்காட்சி ஆகும்.
            இப்பதினோறாவது செங்காந்தள் அறிவுத் திருவிழாவில் புத்தக ஆர்வலர்களும், கிராமக் கல்வியாளர் பெருமக்களும், மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்களை அள்ளிச் சென்றனர்.
            பதினோறாவது செங்காந்தள் அறிவுத் திருவிழாவின் மூலம் 78 புத்தகங்களைப் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்த்துள்ளோம்.
            நமது அறிவுத் திருவிழாவின் இலக்கான ஒரு லட்சம் புத்தகங்களைப் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் நாம் இன்னும் அடைய வேண்டிய இலக்கு 97,249 புத்தகங்கள் ஆகும்.
            இவ்வறிவுத் திருவிழா மூலம் நாம் கொண்டு சேர்த்த 79 புத்தகங்கள் போக, 97,249-78=97,171 புத்தகங்கள் அறிவுத் திருவிழாவின் மூலம் நாம் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டிய இலக்கு ஆகும்.
            97,171 புத்தகங்களைப் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்க்க கரம் கோர்ப்போம்! வாசிப்பு எனும் பயில் வளர உரம் சேர்ப்போம்!
            ஒவ்வொரு மாதமும் ஒரு அறிவுத் திருவிழாவையேனும் நடத்த வேண்டும் என்பது செங்காந்தள் அறிவுத்  திருவிழா  வின் இலக்குகளுள் ஒன்றாகும். ஆனால் இவ்வாண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பள்ளிகளின் தொடர்ச்சியான கல்விபணிகள், ஆசிரியர்களுக்கான தொடர் பயிற்சிகள் மற்றும் புள்ளிவிவரப் பதிவேற்றப் பணிகள் காரணமாக அறிவுத் திருவிழாவை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. விடுபட்ட அவ்விரண்டு மாதங்களுக்கான அறிவுத் திருவிழாவை ஈடுகட்டும் வகையிலும், இம்மாதமான அக்டோபர் மாதத்துக்கான அறிவுத் திருவிழாவை நடத்தும் வகையிலும் இம்மாதத்தில் மூன்று அறிவுத் திருவிழாவை முன்னெடுக்க துணை நின்ற திருநாட்டியத்தான்குடி, உச்சிவாடி மற்றும் பெரியகொத்தூர் பள்ளிகளுக்கு செங்காந்தள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...