எனக்கான கனவுகள் வருவதில்லை!
கனவு
பிடிப்பதில்லை
கனவின்
காட்சிகள் யாருடையவை?
பாம்பு
துரத்துகிறது
ஓட
மறுத்து நிலைகுத்தி நிற்கின்றன கால்கள்
கனவின்
எண்ணங்கள் யாருடையவை?
எழுத
நினைக்கும் விடைகள்
மறந்து
போன தேர்வறையில்
வியர்வைச்
சொட்ட அமர்ந்திருக்கிறேன்
கனவின்
இயக்கம் யாருடையவை?
அவமதிக்கப்பட்டு
கூனி குறுகி நிற்க
ஐஸ்கிரீம்
தின்று குதித்துக் குதூகலிக்கிறது
எப்போதும்
சுறுசுறுப்போடு இயங்கும் சாதுர்யம்
கனவுகள்
பிடிப்பதில்லை
எனக்கான
கனவுகள் வருவதேயில்லை
இவைகள்
யாருக்கோவான கனவுகள்
*****
No comments:
Post a Comment