புறணி பேசுபவர்களுக்கு
ஏது கற்பனை வறட்சி?
*****
ஆயிரம் நெத்திச்சூடிகள்
வாங்கியிருப்பேன். அவ்வளவு ஏன் வாங்கினேன் என்பீர்கள்! ஒவ்வொரு விழாவிலும் ஒரு நெத்திச்சூடியைத்
தொலைப்பதே பாப்பாவின் வேலை.
*****
மிகவும் குழப்பமாக
இருந்தால் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
*****
அது அதற்கென்று ஒரு மனம் வந்து செய்தால் நன்றாகத்தான் இருக்கிறது. அதற்குள் அவசரபடுத்துவதற்கென்றே
சுற்றி நான்கு பேர் இருக்கிறார்கள்.
*****
தொழிலதிபர்கள் என்போர்...
1) இந்தியாவில்
படித்து விட்டு வெளிநாட்டில் தொழில் செய்கிறார்கள்.
2) இந்தியாவில்
கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிறார்கள்.
*****
No comments:
Post a Comment