கனவின் மாத்திரைகள்
எப்போதும்
வரும்
தலைவலிக்காக
ஒரு கோடாலித்
தைல பாட்டிலை
சட்டைப் பையில்
தயாராக வைத்திருப்பவன்
கிடைக்கும்
கொஞ்ச நேர
இடைவெளியில்
வயிற்று வலிக்கு
மாத்திரை
போட்டுக்
கொண்டு
மூட்டு வலியைப்
பொருட்படுத்தாமல்
நின்று கொண்டிருக்கிறான்
முதுகு வலி
அதிகரிக்கும் நேரத்தில்
ஓடத் துவங்குகிறான்
உடல் துவண்டு
விழும் நேரத்தில்
ஒரு தேநீரை
உட்கொண்டு
ஓவர் டைம்
என்று தயாராகிறான்
படுக்கையில்
விழும் போது
ஒரு தூக்க
மாத்திரையைத் தயாராக
வைத்து இருக்கிறான்
அவனுக்கு கனவுகள்
இருக்குமா என்பதை
அவன் காலையில்
எழுந்து
கழிவறைக்குச்
செல்வதற்குள்
கேட்டு விட
வேண்டும்.
*****
No comments:
Post a Comment