10 Dec 2017

சாலை எனும் புண்ணியவான்

சாலை எனும் புண்ணியவான்
இந்த சாலை விதிமுறைகளிடம்
முறையிட முடிவதில்லை
நடைபெறும் விபத்துகளை
விபத்துகள் தினம் நிகழ்ந்து
கொண்டுதான் இருக்கின்றன
என அலுத்துக் கொள்கிறது போக்குவரத்து
சாலை ஓரத்தில்
சென்று கொண்டிருப்பவனை
அடித்துப் போட்டு விட்டு
நிற்காமல் செல்லும்
வாகனத்தை வேடிக்கைப் பார்க்கும் மரம்
தன் மேல் அவன் மோத வரும் நாளை
எண்ணிக் கொண்டிருப்பது போல
இலைகளை படபடக்கிறது
சுற்றியுள்ளவர்கள் ஓடி வந்து
தூக்கிச் செல்லும் போது
இந்த மனிதர்களைத் தாங்கியதற்கு
பெருமைபட்டுக் கொள்கிறது சாலை

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...