10 Dec 2017

நடப்பதெல்லாம் வடிவேலு காமெடிகள்!

நடப்பதெல்லாம் வடிவேலு காமெடிகள்!
            நாட்டில் நடப்பதெல்லாம் வடிவேலு காமெடிகளாக இருக்கின்றன. 'கிணற்றைக் காணும்' என்றார் வடிவேலு. ஏரிகளே காணாமல் போயின. சமீபத்தில் மழை வெள்ளம் தேங்கி மெரினாவே காணாமல் போனது.
            இம்சை அரசனில் க.க.கோ என்பார் வடிவேலு. நாட்டில் வழங்கப்படும், உலவும் விளக்கங்கள் பலவும் அந்த ரகத்தில் மாறிக் கொண்டு இருக்கின்றன.
            அடுத்த முதல்வர் நாற்காலிக்கு அவரது வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் போன்ற பல சங்கங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. சட்டசபைக்கான தேர்தல் வந்தால் எத்தனை கட்சிகள், சங்கங்கள், அரசியல் தலைவர்கள் உருவாகுவார்கள் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியாது போலிருக்கிறது.
            வடிவேலுவின் நானும் ரவுடிதான் என்கிற ரேஞ்சுக்கு நானும் தலைவர்தான் என்ற ரேஞ்சுக்குப் புற்றீசல் புதுப்புதுத் தலைவர்கள் புறப்பட்டு வருகிறார்கள்.
            பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மெட் வீக்கு என்ற அவரது கூற்றை மெய்ப்பிப்பது போலவே ............. அமைப்புகளின் ஆட்டங்கள் மாறிக் கொண்டு இருக்கின்றன.
            எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணணும் என்பது போல பிரபலங்களே காமெடிக் கூத்தடிக்கிறார்கள்.
            'அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்க!' என்பாரே வடிவேலு. 'இதற்கு மேல் வேறு என்ன வடிவேலு காமெடி இருக்கிறது?' என்று நீங்கள் என்னை அடிச்சுக் கேட்டாலும் நான் சொல்லுறாப்புல இல்ல. நீங்களே கற்பனைப் பண்ணிப் பாருங்களேன். எதில் அவரது காமெடி இல்லாமல் இருக்கிறது? எல்லாவற்றிலும் இருக்கிறது!

*****

No comments:

Post a Comment

வியக்க வைக்கின்ற விந்தை மனிதர்!

வியக்க வைக்கின்ற விந்தை மனிதர்! இந்த மனிதரை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை. யார் அந்த மனிதர் என்கிறீர்களா? நீங்களும் உள்ளுக்...