ரெட்டிகளின் பெட்டிகள்
யாருப்பா
இந்த ரெட்டிகள்?
கர்நாடகத்தில்
ஒரு ரெட்டி கோடிகளை தெருக்கோடி வரை கொட்டி இறைத்து கல்யாணம் நடத்தி பட்டையைக் கிளப்புகிறார்.
தமிழ்நாட்டில்
ஒரு ரெட்டி தங்கத்தையும், நகையையும் குப்பை மேடுகளைப் போல் குவித்து வைத்து களேபரப்படுத்துகிறார்.
இதையெல்லாம்
கருத்தில் கொண்டுதான் படிக்காதவன் படத்தில் தனுஷ் ரெட்டிப் பொண்ணைக் காதலிப்பது போல
நடித்திருப்பார்.
அதற்குத்
தகுந்தாற் போல் அந்த ரெட்டியும் ஹெலிஹாப்டரில் வந்து இறங்குவதுபோல அவருக்கு இன்ட்ரோ
கொடுத்திருப்பார்கள்.
அப்படிப்பட்ட
ரெட்டி பொண்ணைத் தூக்க தனுஷூம், விவேக்கும் "ரெட்டியைப் பார்க்குறோம்! பொண்ணைத்
தூக்குறோம்!" என்ற முடிவோடு திருட்டு ரயிலேறி ஆந்திரா புறப்படுவார்கள்.
அதை
இப்படிக் கொஞ்சம் புரட்டிப் போட்டால் தற்போதைய சூழ்நிலைக்கும் அருமையாகப் பொருந்தி
விடும். "ரெட்டியைப் பார்க்கிறோம்! பொட்டியைப் தூக்குறோம்!" அடேங்கப்பா!
பொட்டிப் பொட்டியாய் எவ்வளவு பணம்! எவ்வளவு நகை!
ரெட்டிகளின்
பெட்டிகள் நீண்டு கொண்டே செல்லும் ரயில் பெட்டிகளைப் போல தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment