பலே! கத்திச் சண்டைகளை நிறுத்துங்கள் வெள்ளையத்தேவன்களா!
கண்டெய்னர் லாரியில் பணம் என்ற புது லைனைப்
பிடித்து, பாக்கி பிடித்தது எல்லாம் கத்திச் சண்டை காலத்து பழையை லைன்கள்தான் கத்திச்
சண்டை என்ற திரைப்படம்.
காதல் போருக்குப் புறப்படுகிறாராம் சசிக்குமார்.
அதற்காகச் சொல்லப்பட்டதுதான் "பலே வெள்ளையத்தேவா!" நாடோடி படத்தைத் தொடர்ந்து
இது போன்று நாடோடித்தனமான படங்களில் நடித்து தள்ளுவது என்ற முடிவில் இருக்கிறார்
சுப்பிரமணியபுரத்துக்காரர்.
கத்திச் சண்டையில் வைகைப் புயல் வடிவேல்
மறுபிரவேசம் செய்திருக்கிறார் என்றால், பலே வெள்ளையத்தேவாவில் கோவை சரளா புதுப்பிரவேசம்
செய்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களுமே வார்தா புயலுக்குப்
பிறகு தமிழகத்தைத் தாக்கியுள்ள மோசமான புயல்கள். பார்க்கப் போன ரசிகர்களுக்கு சேதாரம்
அதிகம். நிவாரணம் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை.
நடிகர் சங்கத்தைக் காப்பாற்றி விட்டதாகச்
சொல்லும் விஷால் ரசிகர்களை ஏமாற்றி விட்டார். மறுபடியும் தன்னுடைய பழைய தாரை தப்பட்டையைக்
கிழித்துத் தொங்க விட்டு இருக்கிறார் சசிக்குமார்.
எம்.ஜி.ஆர். காலத்து கத்திச் சண்டை படங்களையும்,
சிவாஜி காலத்து வெள்ளையத்தேவன்களையும் படங்களாக எடுக்கிறார்கள்.
இப்போதெல்லாம் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும்
வாலிபனும், சிவாஜியின் கர்ணன் படங்களுமே ரீ ரிலீஸில் பட்டையைக் கிளப்புகிறது தெரியுமா?
இப்படியெல்லாம் படம் எடுத்து விட்டு நாலு
நாள்கள் கூட ஓடுவதில்லை என்று குறைபட்டுக் கொண்டால் என்ன சொல்வது?
*****
No comments:
Post a Comment