26 Dec 2016

ராம ராம ராம ராம ராம மோகன ராவ்


ராம ராம ராம ராம ராம மோகன ராவ்
உலகம் முழுவதும்
வீடுகள் கட்டினாலும்
வசிக்கப் போவது
ஒரு வீட்டில்தான்!

கோடி கோடியென
சொத்துகள் குவித்தாலும்
துய்க்கப் போவது
கோடியின் சிறு பகுதிதான்!

கட்டுக் கட்டாகப்
பணம் இருந்தாலும்
செலவாகப் போவது
சில கட்டுகள்தான்!

கிலோ கிலோவாக
தங்கம் இருந்தாலும்
அணியப் போவது
சில பல கிராம்கள்தான்!

பினாமி பெயர்களில்
பல ஏக்கர்கள் இருந்தாலும்
கடைசியில் சொந்தமாவது
ஆறடி நிலம்தான்!

நல்ல செயல்களை
செய்யாவிட்டாலும் பரவாயில்லை
கெட்ட செயல்களை
செய்ய வேண்டியதில்லை

பேருக்குக் களங்கம் வந்த பிறகு
இனி
யாருக்கு எதை மாற்றி
என்ன செய்யப் போகிறார்
ராமச்சந்திரா என்று
படுத்து விட்டவர்?!

காசா வந்து
களங்கம் துடைக்கும்?
களங்கம் வந்தால்
காசேதான் கலங்க அடிக்கும்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...