25 Dec 2016

அவஸ்தை


அவஸ்தை
இனி
தேய்ந்து பிய்யும்
அவஸ்தையில்லை
ஒற்றைச் செருப்புக்கு!
*****

அதற்கு தக
பாட்டிமார்கள் விற்ற
நாவல் பழமும்
இலந்தைப் பழமும்
வாங்கித் தின்ற
பள்ளியின்
காம்பெளண்ட் சுவரை ஒட்டி
ஒரு நீண்ட வரிசையில்
நின்று கொண்டிருக்கிறேன்
பிள்ளைக்கு
ஒரு சீட்
வாங்க!
*****

கடைசி கருணை
கடைசி கரண்டி சுண்டல்
காட்டுகிறது
கடவுள்
நம் மீது காட்டும்
கருணையை!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...