24 Dec 2016

கொன்னே புடுவேன்!


வேர் இஸ் தட் ஏரியா?
"பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் இதுல எதுல இருக்கீங்க?" என்று கேட்டவனைப் பார்த்துக் கேட்டான் அவன், "இந்த ஏரியா எல்லாம் எங்க இருக்கு சாரே?"
*****

சாரிப்பா!
"பார்த்துட்டுப் போய் ரொம்ப நாளாச்சு! சாரிப்பா!" என்றான் முகில்வர்ஷன், முதியோர் இல்லத்தில் இருந்த அப்பாவிடம்.
*****

முடிவு
நான்கு மாதத்துக்கு முன் லவ் லெட்டர் கொடுத்ததற்காக காறித் துப்பிய முத்தழகு, லவ் லெட்டர் கொடுத்தவனோடேயே ஓடிப் போனாள்.
*****

என் செய்வேன்?
"என் கனவுகள் பெரிசு! அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறேன்?"
*****

கொன்னே புடுவேன்!
"இனிமே பேய் படம் எடுத்தீங்க கொன்னே புடுவேன்!" அந்தரத்தில் நின்ற துப்பாக்கியிலிருந்து வந்தது மிரட்டல் குரல்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...