24 Dec 2016

பெருமழை


அடையாளம்
அங்கிருந்த குளத்திற்கு
அடையாளம்
அதன் மேல் நிற்கும்
பேருந்து நிலையம்!
*****

கனவு
மரம் நடும் கனவு
நிறைவேறியது
போன்சாய் மரம் ஒன்றை
வாங்கி வைத்தப் பிறகு!
*****

பெருமழை
எதிர்பாராமல் பெய்யும்
பெருமழையைப் போல
நனைத்து விடுகிறது
எப்போதாவது
எதிர்பாராமல் கிடைக்கும்
ஒரு குழந்தையின் முத்தம்!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...