24 Dec 2016

தமிழக அரசியல் - குறுக்கு வெட்டுத் தோற்றம்


தமிழக அரசியல் - குறுக்கு வெட்டுத் தோற்றம்
            றிஞர் அண்ணா அவர்களுக்குப் பின் தமிழக அரசியல் திரைப்பட ஈர்ப்பை மையமாகக் கொண்டே இயங்கி வருகிறது.
            திரைப் பின்புலம் நிரம்பியவர்களே முதலமைச்சர்களாக வருகின்றனர். ஒரு படம் நடித்து விட்டால் அந்தப் படத்தில் நடித்த காமெடியன் வரை அனைவருக்கும் முதலில் வருவது முதலமைச்சர் கனவுதான்.
            மக்களும் பொது வாழ்க்கையில் பார்த்து பார்த்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க அலுப்புப் பட்டுக் கொண்டு, திரைப்படத்தைப் பார்த்து அதிலிருந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருப்பதாகக் கருதிக் கொண்டு செயல்படுகின்றனர்.
            இப்போது அவர்கள் அதிகம் பார்ப்பது சின்னத்திரை என்பதால், அநேகமாக வரக் கூடிய ஆண்டுகளில் சின்னத்திரையிலிருந்தும் முதலமைச்சர்கள் வர வாய்ப்புகள் இருக்கின்றன.
            அரசியல் என்ற வகையில் பார்த்தால், தமிழகத்தில் அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பின் நிகழ்ந்தது இதுதான்.
            கருணாநிதி ஆதரவு அரசியல் & கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற அளவிலே தமிழக அரசியல் இதுவரை நடந்து வந்திருக்கிறது.
            கருணாநிதியை விரும்பியோர் தி.மு.க.வுக்கும், வெறுத்தோர் அ.தி.மு.க.வுக்கும் வாக்களித்தனர்.
            பின் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வையும் வெறுத்தோர் தே.மு.தி.மு.க.வுக்கு வாக்களித்துப் பார்த்தனர்.
            இப்போது அவர்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் நிறைய இருக்கின்றன. அவர்கள் விரும்பினால் அவர்கள் சார்ந்துள்ள சாதிக்கு ஆதரவாகக் வாக்களிக்க கூட அவர்களின் சாதியின் சார்பில் ஒரு கட்சி இருக்கிறது.
            ஆனால் அமெரிக்கா போல் இங்கும் இரு கட்சி முறையிலேயே மக்கள் வாக்களித்துக் கொண்டு வருகின்றனர்.
            மத்தியில் காங்கிரஸ் - பா.ஜ.க. என்றால் தமிழகத்தில் தி.மு.க - அ.தி.மு.க.
            இதை முறியடித்து மூன்றாவதாக ஓர் ஆட்சி அமைய அந்த அளவுக்கு எளிமையான, மக்களோடு மக்களாக உள்ள தலைவர் இன்னும் பிறக்கவில்லை நம் மண்ணில்.
            அப்படிப் பிறந்தாலும் அவரை கடைசி வரை நல்லக்கண்ணு மாதிரியாகவே இருக்க வைத்து விடுகின்றனர் இந்தத் தமிழ்ப் பெருங்குடி மக்கள்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...