23 Dec 2016

பார்சல்


பார்சல்
"ஒண்ணுமே புரியலயே!" என்று அந்த கிழிந்த ஜீன்ஸ்காரன் சொல்லவும், "ஓ.கே! ஒரு நவீன கவிதை பார்சல்!" என்றான் ஒரு பக்க மீசையையும், மறுபக்க தாடியையும் மழித்திருந்த அரைக்கால் சட்டைக்காரன்.
*****

கொள்ளி
"கொள்ளி வெச்சிட்டீங்களா?" வக்கீல் கேட்டதும், "ம்! இனி சொத்தை டிரான்ஸ்பர் பண்றதுல எந்தப் பிரச்சனையும் இருக்காதுல்ல?" என்றான் அமெரிக்காவிலிருந்து வந்த செல்வமுருகன்.
*****

ஒர்க் அவுட்
"சுகருக்கு இது சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்!" என்ற கடைக்காரனிடம் அந்த சூரணத்தை வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினார் டயாபடிஸ் டாக்டர் தாமோதரன்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...