பேரிடர் மேலாண்மை - புதிய அணுகுமுறை
பெருவெள்ளம் வருகிறதா?
வந்து போகட்டும்.
கடும் புயல்காற்று வீசுகிறதா?
வீசி விட்டுப் போகட்டும்.
வறட்சி பாதிக்கிறதா?
பாதித்து விட்டுப் போகட்டும்.
முன்பு ஆயிரம் ரூபாய்
நோட்டு இருந்தது. இப்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருக்கிறது.
ஆகவே, பேரிடரை இரண்டு
மடங்கு வேகத்தோடு எதிர்கொள்வோம் என்று நிவாரணமாக ஒரு இரண்டாயிரம் நோட்டை வழங்கி
விட்டால் விஷயம் முடிந்து விட்டது.
பேரிடர் மேலாண்மை குறித்த
பாடங்கள் இருந்தாலும், அதன் அவசியங்களை உணர்ந்து இருந்தாலும், பேரிடர் மேலாண்மை என்பது
நம்மை பொருத்த வரையில் நிவாரணம் கொடுப்பதாகவே இருக்கிறது.
நாம் நிறைய பேரிடர்களை
எதிர்பார்க்கிறோம் என்றுதான் நினைக்கிறேன்.
அப்போதுதானே நிறைய
நிவாரணம் வழங்க முடியும் என்று காத்திருக்கிறார்கள் மேலே இருப்பவர்கள்.
நிறைய நிவாரணங்கள் வழங்கப்பட்டால்தானே
சம்பந்தப்பட்டவர்கள் பொழைப்பு நடத்த முடியும்.
ஆக, ஆண்டு இறுதியிலாவது
வார்தா புயல் வந்து அவர்கள் பொழைப்பில் மண்ணள்ளிப் போடாமல் காப்பாற்றி விட்டது.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment