23 Dec 2016

தடம்


முடிவு
பேரம் படிந்த பின்
முடிவுக்கு வருகிறது
ஆசையோடு வளர்த்த
ஆட்டின் வாழ்வு!
*****

தட்டிப் பறித்தல்
முடமான ஒருவனும்
குருடான ஒருவனும்
தள்ளாத கிழவன் ஒருவனும்
இடை நிற்க
தட்டிப் பறித்து விட்டுப்
போய் விடுகிறார்
உண்டியல் வைத்து
வீற்றிருக்கும்
கடவுள்!
*****

தடம்
நதியோடிய தடத்தை
நினைவுபடுத்தி
ஓடிக் கொண்டிருக்கிறது
சாக்கடை!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...