நிறுத்தம்
ஆலமர ஸ்டாப்பிங்கில்
இருப்பதென்னவோ
தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில்
கட்டப்பட்ட
பயணியர் நிழற்குடை!
*****
பொது
முள் மரமோ
பழ மரமோ
கூடு கட்டும்
பறவைகள்!
*****
நீட்சி
பிணம்
எரிந்து பின்
எடுத்து நீட்டப்பட்டது
பணம்!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment