22 Dec 2016

மை காட்!


கை நீட்டாமல்...
"காரியம் முடிஞ்சிடுச்சு!" என்று சொன்னவரின் மொபைலுக்கு 555 ரூபாயை ஏற்றி விட்டான் ராகவன்.
*****

மை காட்!
"ஒரு வெளிநாட்டுப் பறவை கூட நம்ம நாட்டுக்கு வரல சார்!" உதவியாளர் சொன்னார்.
"ஓ! மை காட்! இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன? இன்னும் மூணு மணி நேரத்துல..." விஞ்ஞானி சொல்லி முடிப்பதற்குள், அந்த இடத்தைச் சுருட்டி அள்ளிக் கொண்டு சென்றது சுனாமி.
*****

மொழி
"இந்த மாலகேயர்கள் மொழியைக் கண்டுபிடிச்சா, உலகம் எப்படி உருவானதுங்றதைக் கண்டுபிடிச்சிடலாம்!" என்றார் ஆராய்ச்சியாளர் ரகுநாத்.
"சார்! அந்த மொழியை மாலகேயர்கள் எப்படி கண்டுபிடிச்சு இருப்பாங்க?" என்றான் அவரது ஆராய்ச்சி மாணவன் அகத்தியன்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...