2 Dec 2016

குத்தும்


பொறுப்பு
"இந்த மாச டியூவையும் கரெக்டா கட்டிடணும்!" மனதுக்குள் நினைத்தவாறே பொறுப்பாக பிக் பாக்கெட் அடிக்கக் கிளம்பினான் உத்தமராசா.
*****

குத்தும்
"பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தும்!" என்ற சித்தப்பாவிடம், "போ சித்தப்பா! பொய் சொன்னா வாய்லதான் குத்தணும்! ஏன் கண்ணைக் குத்தணும்?" என்றாள் அம்முக்குட்டி.
*****

நுழைவு
காந்தி, காமராசர், தெரசா போன்றோர் கூட்டாக நுழைந்தனர், கட்டணம் கட்டாவிட்டால் வெளியேற்றி விடும் அந்த பள்ளிக்கு ஒரு மாறுவேடப் போட்டிக்காக.
*****

நினைவு
இன்றும் பார்க்கம் போதெல்லாம் நினைவு கூறப்படுகிறது பதினொரு மணிக் காட்சிக்காக அந்த மூடப்பட்ட திரையரங்கம்.
*****

தடுப்பு
"பெண் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்து விட்டோம்!" என்றார் ஆவேசமாக தலைவர். "அதான்! சிசுவா இருக்கிறப்பவே கலைச்சிடுறானுங்களே!" ஆதங்கபட்டுக் கொண்டாள் சமூகப் போராளி அஜிதா.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...