1 Dec 2016

காதல் வந்தது


காதல் வந்தது
நீண்ட நாள்கள் உன் பின் அலைந்தேன்
காற்றோடு பறக்கும் தூசி போல.
உன் கன்னம் ஒத்த ரோஜா தந்து
உன் குரல் எப்போதும் கேட்க விழைந்து
செல்பேசி வாங்கித் தந்து
உன் கண்கள் போல் மின்னும்
வைர மோதிரம் வாங்கித் தந்து
உன் மேனி போல் பளபளக்கும்
பட்டுச் சுரிதார் வாங்கித் தந்து
இன்னும் என்னனென்னவோ
வாங்கித் தந்து
அப்போதெல்லாம் வராத காதல்
என் மீது வந்ததுனக்கு
இரண்டாயிரம் நோட்டு ஒன்றுக்கு
உனக்குச் சில்லரை மாற்றித் தந்த போது!
*****

சமத்துச் சம்புலிங்கத்தின் பொருளாதார சிந்தனைகளில் சில
            1) ரூபாய் நோட்டை அச்சடித்து முழுமையாக விநியோகிக்க குறைந்தது 120 நாள்களாவது ஆகும் என்கிறார்கள். சிவகாசிக்கு இது ஒரு நாள் வேலை.
            2) ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டைத் தற்காலிகமாகப் போக்க, ஒவ்வொரு நபரும் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் கலர் ஜெராக்ஸ் எடுக்க அனுமதிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.
            3) ஏ.டி.எம்.களை விட விரைவாகப் பணம் விநியோகிக்கும் இடைத்தேர்தல் ஆசாமிகளைப் பிடித்தால் ஒரு சில நாள்களில் இயல்பான பணப்புழக்கம் திரும்பும். ஆனால், இடைத்தேர்தல் இல்லாத காலக்கட்டத்தில் இதை எப்படி செய்வது என்று யோசித்தே காலத்தைக் கடத்தி விடுவார்கள்.
            4) ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்து விட்டால், நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், பத்து ரூபாய் நோட்டில் கள்ளநோட்டு அடிக்க மாட்டார்களா? என்ற சந்தேகத்தால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களக்கு புண்ணியமாய்ப் போகும்.
            5) நாட்டில் இரண்டாயிரம்தான் கிடைக்கும் என்றால் எல்லா பொருள்களின் விலையையும் இரண்டாயிரம் என மாற்றினால் என்ன? பஞ்சு மிட்டாய்க்காரன் கூட "சில்லரை வைத்து இருக்கிறீர்களா? ரெண்டாயிரம் நோட்டு வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டு விட்டு, ரெண்டாயிரம் நோட்டு என்றால் பஞ்சாய்ப் பறந்து விடுகிறான்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...