2 Dec 2016

காசு! தங்கம்! கட்டுபாடு!


காசு!  தங்கம்!  கட்டுபாடு!
தங்கக் கட்டுபாடு
பெரிதாக நம்மை பாதித்து விடாது என்பேன்
வாங்கிய மறுநாளே
அநேகமாக
அடகுக்கடைக்குச் சென்று விடுவதால்,
அடக்கடை சேட்ஜிக்கள்
எச்சரிக்கையாக இருந்து கொள்ளட்டும்!

ஆண்களுக்கு 100 கிராம் என்பதால்
எருமை மாட்டுச் சங்கிலி போல்
கழுத்துச் சங்கிலியும்
தேர்வடக் கயிறு போல்
பிரெஸ்லெட் போடும்
ரெளடிகள் இனி தொலைவார்களாக!

பெண்களுக்கு 500 கிராம் என்பதால்
வழக்கம் போல் அவர்கள்
நகைக்கடை போல் அலைவார்களாக!

பொன்மகள் வந்தாள்
500 கிராம் நகை தந்தாள் என்று
பாட்டு வரியில் இனி திருத்தம்
கொண்டு வருவதாக!

தங்கமகன் திரைப்படத்துக்குக் கீழே
தங்கமகன் - 100 கிராம் என்ற
எச்சரிக்கை வாசகம் இடம்பெறுவதாக!

தங்கக் கட்டுபாடு என்பதைச்
சரியாகப் புரிந்து கொண்டு
பக்கத்துவீட்டு பரமசிவம்கள்
அறுபது எழுபது கிலோ எடையுள்ள
தங்கம் என்ற பெயரிலான
தங்கள் மனைவிமார்களை
500 கிராமாக எடை குறைக்கும் முயற்சியை
எடுக்கச் சொல்லாமல் இருப்பார்களாக!

என் தங்கம் என் உரிமை
என்று புரட்சிப் போராட்டம்
நடத்தியவர்கள்
இனி
யாது ஆகுவர் கொல்?
என் ஆகுவர் கொல்?
*****

குறைவும் அதிகமும்
ற்றில் தண்ணீர் வருகிறதா?
என்று
கேட்பவர்கள் குறைந்து விட்டார்கள்!
ஏ.டி.எம்.மில் பணம் வருகிறதா
என்று
கேட்பவர்கள் அதிகரித்து விட்டார்கள்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...