சந்தோச நதி
சிறு குழந்தைகளின்
புன்னகை வழியே
வழிந்தோடும்
பெருத்த மன இறுக்கங்களைக்
கரைத்துக் கொண்டோடும்
சந்தோச நதி!
*****
அறிகுறி
அறிகுறி இன்றி
செத்துப் போனான்
சாலையோர குறிசொல்லி
ப்ளாட்பாரம் மேல்
ஏறி வந்த
காரில் நசுங்கி!
*****
தடதட காதல் வண்டி
இரும்புச் சக்கரங்கள்
தடதடக்க
இந்த ஸ்டேஷனில்
ஏற்றிக் கொண்டும்
இன்னொரு ஸ்டேஷனில்
இறக்கிக் கொண்டும்
பிறகு இன்னும்
சில காதல்களைச்
சுமந்து கொண்டும்
பட்டாம்பூச்சியாய்ப்
படபடக்கிறது
காதல் புகையோடு
ஒரு தொடர்வண்டி!
*****
No comments:
Post a Comment