14 Oct 2016

குண்டுகள் அகிம்சையை அறிவதில்லை!


ஒரு காந்தி           
சுடுவதற்கு
ஆயிரம் பேர்
திரிந்த போதும்
சுடப்படுவதற்கு
ஒரு காந்திதான்
இருந்தார்!
*****

குண்டுகள் அகிம்சையை அறிவதில்லை!
காந்தியைத் துளைத்த பின்னும்
கடைசி வரை
அகிம்சையை
அறியாமல் போனது
துப்பாக்கிக் குண்டு!
*****

கசப்பு         
கால் பவுன் குறைந்ததைக்
காரணம் காட்டி
கசப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள்
இனிப்பாக இருக்கும்
மறுவீட்டுப் பலகாரங்களை!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...