30 Aug 2026

மெய்நிகர் பிரம்மன்

பாண்ட் 007 டூ 000

அவனும் ஒரு காலத்தில்

ஜேம்ஸ் பாண்ட்தான்!

கல்யாணம் பண்ணி வைத்தார்கள்

ரப்பர் பாண்ட் ஆகி விட்டான்!

*****

வெற்றிச் சின்னம்

எத்தனை பேர் நின்று

எத்தனை முறை தோற்றாலும்

வைப்புத்தொகையே போனாலும்

ஒற்றை ஓட்டுக் கூட

விழாமல் போனாலும்

தலைவருக்குத்

தலைமுறைத் தலைமுறையாக

அதுவே

வெற்றிச் சின்னம்

*****

உயிர்க்கும் பாடல்

யார் சொன்னது

உயிருள்ளது பாடும்

உயிரற்றது பாடாது என்று

வாய் வைத்தால்

எதுவும் பாடும்

மூங்கில் போல்

குழலாக!

*****

உருமாற்றம்

நீந்திப் பார்க்கலாம் என்றால்

குளம் இருந்த இடத்தில்

வீடு

*****

மெய்நிகர் பிரம்மன்

உலகின் மிக அழகிய பெண்

இவள்தான் என்று

சாட்பாட்டிடம் பூரித்தான்

அந்த இளைஞன்!

அது

நான் உருவாக்கியதாகவும் இருக்கலாம்

என்றது

ஏஐ!

*****

டச் அப்

இதற்கு மேல் முடியாது என்ற

ஹீரோவிடம்

விடுங்க சார்

கிராபிக்ஸில் பார்த்துப்போம்

என்றார்

டைரக்டர்

*****

No comments:

Post a Comment