நடிப்பெனப்படுவது…
நடிப்பெனப்படுவது
யாதெனில்
நடிப்பது
நடிப்பு
வராமலிருப்பதும் ஒரு நடிப்பு
நடிப்பு
வருவதும் ஒரு நடிப்பு
சுமாராக
நடிப்பதும் ஒரு நடிப்பு
ஜோராக
நடிப்பதும் ஒரு நடிப்பு
நடிப்பென்பது
எது
நடிப்பில்லை
என்பது எது
கோலிவுட்டில்
சுமாரெனச்
சொல்லப்பட்டவர்
பாலிவுட்டில்
கலக்கிக்
கொண்டிருந்தார்
*****
கூண்டு
எத்தனை
பச்சை
எவ்வளவு
சிவப்பு
என்னே
அழகு
பச்சை
சிவப்பை மிஞ்சும்
பஞ்சவர்ணமும்
உண்டென
எவ்வளவுதான்
வியந்தாலும்
அடைபட்டு
விட்டால்
கூண்டுதான்
கிளிக்கு
*****
No comments:
Post a Comment