விண்வெளியில் ஒரு டேட்டா சிட்டி – எலான் மஸ்கின் அட்ராசிட்டி!
எலான்
மஸ்க் சும்மா இருக்க மாட்டார். மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். இம்முறை மனிதர் தரையில்
கால் வைப்பதாக இல்லை.
உங்கள்
கையில் இருக்கும் செல்போனில் ஒரு மெசேஜ் டைப் செய்து அனுப்பினால், அது பக்கத்து தெருவில்
இருக்கும் டவருக்குப் போய், அங்கிருந்து கடலுக்கடியில் இருக்கும் கேபிள் வழியாகக் கலிபோர்னியாவுக்குப்
போய், டேட்டா சென்டரில் பிராசஸ் ஆகித் திரும்ப வருவதற்குள் சில மில்லி செகண்டுகள் ஆகும்.
மஸ்க்கிற்கு இது பிடிக்கவில்லை. மஸ்க்கு எதுதான் பிடித்திருக்கிறது?
ஏன்
தரையில் கஷ்டப்பட வேண்டும், மேலே போயிடலாம் என்கிறார்.
இதற்காக
அவர் என்ன செய்யப் போகிறார் என்றால், சுமார் பத்து லட்சம் செயற்கைக்கோள்களை வரிசையாக
அணிவகுத்து நிற்க வைக்கப் போகிறார்.
எதற்குத்
தெரியுமா? விண்வெளி டேட்டா சென்டர் அமைக்க. அப்படியானால் நம்மூர் பிபிஓ சென்டர்களின்
கதி என்ன என்கிறீர்களா? அதோ கதிதான்.
அது
சரி, மஸ்க் ஏன் இப்படி யோசிக்கிறார் என்கிறீர்களா?
பூமியில்
டேட்டா சென்டர் வைத்தால், இரண்டு பெரிய தலைவலிகள்.
ஒன்று,
கரண்ட் பில். ஏகப்பட்ட சர்வர்கள் ஓடும். அதற்குத் தீனி போட மெகா வாட் கணக்கில் மின்சாரம்
வேண்டும்.
இரண்டு,
ஏசி பில். சர்வர்கள் சூடாகும். அதைக் குளிர்விக்க ராட்சத ஏசிகள் வேண்டும். பாதி லாபம்
ஏசி பில்லுக்கே போய்விடும்.
ஆகவே
மஸ்க் இப்படி யோசிக்கிறார். விண்வெளியில் சூரியன் எப்போதும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும்.
மேகமூட்டம் கிடையாது, மழை கிடையாது. சோலார் பேனலை வைத்தால் தமிழ்நாட்டைப் போல விலையில்லா
மின்சாரம். அடுத்தது குளிர்ச்சி. விண்வெளியே ஒரு பெரிய ப்ரிட்ஜ் மாதிரிதான். ஊட்டி,
கொடைக்கானல் ரேஞ்சுக்கு இருக்கும். ஹீட் சிங்க் வைத்தால் வெப்பம் தானாக வெளியேறிவிடும்.
ஆம்,
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இன்னும் சில வருடங்களில் உங்கள் மொபைல் டேட்டா பூமியிலிருந்து
அல்ல, மேலிருந்து வரப்போகிறது. நீங்கள் அனுப்பும் ஒரு ஹாய் மெசேஜ்ஜோ, ஸ்மைலியோ மேகங்களைத்
தாண்டி, வளிமண்டலத்தைக் கடந்து, அங்கே சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு சர்வருக்கு போய்,
ஒரு லேசர் வெளிச்சத்தில் இன்னொரு சாட்டிலைட்டிற்குத் தாவி, பிராசஸ் ஆகித் திரும்ப உங்கள்
கைக்கு வரும்.
இப்போது
பிரச்சனை என்னவென்றால், பத்து லட்சம் சேட்டிலைட்டுகள் மேலே போனால் என்னவாகும்? டிராபிக்
ஜாம் ஏதும் ஆகுமா? விண்வெளியில் நிறைய ஸ்பேஸ் இருக்கிறது என்பது வேறு விசயம்.
ஆனால்
ஏற்கனவே அங்கு ஏகப்பட்ட சேட்டிலைட்டுகள் பயன்படுபவை, பயன்படாதவை, செயல்படுபவை, செயல்
இழந்தவை என்று ஏகப்பட்டவை கிராக்கு பிடித்ததைப் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால்
விண்வெளிக் குப்பைகள் அங்கே அதிகம். இதில் பத்து லட்சம் புது வரவுகள் என்றால், இரவு
வானத்தைப் பார்க்கும்போது நட்சத்திரங்களுக்குப் பதில் மஸ்க்கின் டேட்டா சென்டர்கள்தான்
மின்னுமோ என்னவோ?
அறிவியல்
வளர்ச்சி பற்றி வழக்கமாகச் சொல்வதுதான் இது என்றாலும், ஆழ்ந்து யோசிக்க வேண்டியிருக்கிறது.
அது என்னவென்றால், அறிவியல் வளர்ச்சி என்பது ஒரு கத்தி மாதிரி. ஆப்பிளையும் வெட்டலாம்,
விரலையும் வெட்டலாம்.
மஸ்க்
ஆப்பிள் வெட்டுவாரா? விண்வெளியின் கரங்களை வெட்டுவாரா? ஒருவேளை வெட்டுவது கரங்கள் என்றால்,
என்றாவது ஒரு நாள் மேலே இருந்து விழப்போகும் மஸ்கின் சேட்டிலைட் டேட்டா சென்டர்களுக்கு
நாம் ஹெல்மெட் போட்டுக்கொண்டு அலைவதா? இதுதான் டிரில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்வி
அந்த டிரில்லியன் டாலர் மனிதருக்குப் புரிய வேண்டுமே!
அமெரிக்காவின்
டிரம்பால் டாக்ஸ் பிரச்சனை என்றால், அமெரிக்காவின் மஸ்க்கால் இப்படி ஸ்பேஸ் பிரச்சனை.
இந்த உலகம் என்ன செய்யப் போகிறதோ? அது சரி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
*****

No comments:
Post a Comment