1 Jun 2025

காலம் ஒரு நாள் கைது செய்யும்!

காலம் ஒரு நாள் கைது செய்யும்!

வெறுப்பேற்றுவது யாருக்குத்தான் பிடிக்காது

எது சொல்லப்படுகிறதோ

அதற்கு மாறாக நடக்க யாருக்குத்தான் தோன்றாது

அமைப்பில் கட்டுபாடுகள் இருக்கும்

உங்களுக்கென கடப்பாடுகள் இருக்கும்

செய்வதைச் செய்துதான் ஆக வேண்டும்

செய்வதிலிருந்து யாரும் விலகி விட முடியாது

மனம் போன போக்கில் இருப்பதை

யார்தான் விரும்பாமல் இருப்பார்கள்

அமைப்பு சிதைவதோ

கட்டமைப்பு குழைவதோ

நினைவுக்கு வராமல் போகலாம்

அவரவருக்கு அவரவர் மனம்

நிம்மதியாக இருக்க வேண்டும்

மற்றவர்கள் நிம்மதி தொலைவது குறித்து

யாருக்கென்ன கவலை

எப்படியும் இருந்து விடலாம் என்று

இருந்து விட முடியாது

எல்லாம் ஒரு நாள் தலைகீழாகத் திரும்பும் போது

யாருடையை நிம்மதியை எல்லாம்

தொலைத்துக் கட்டினீர்களோ

எல்லாவற்றுக்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டியிருக்கும்

எவற்றைச் செய்வதிலிருந்து விலகினீர்களோ

அவற்றையெல்லாம் செய்து தீர வேண்டியிருக்கும்

யாருடைய கடமையிலிருந்து

யாரும் விலகி விட முடியாது

நீங்கள் சில காலம் தவிர்க்கலாம்

சில காலம் இளைப்பாறலாம்

சில காலம் தப்பி ஓடலாம்

காலம் ஒரு நாள் கைது செய்தே தீரும்

*****

No comments:

Post a Comment