25 Oct 2021

A Kerchief Merged With Air

A Kerchief Merged With Air

Handkerchief that does not get caught in the hands

Wandering in the hands of the wind

At windless times

Sweat dripping down forehead

Absorbed its soft touch

When the wind came and wiped away the sweat

Flying like a baby in the air

Maybe sweat in the air

Handkerchief for sweaty air

Sweat can be wiped off

Like the handkerchief carried by the wind

Later I searched the so many shops

Just a rare handkerchief carried by the wind

How many handkerchiefs since then

I look left to miss in the air

Things lost in the waves

Like the ocean that comes and brings

The wind was coming and bringing with the hands

A handkerchief that wind loving one

I could not buy in any merchant shops

*****

காற்றில் கலந்த கைக்குட்டை

காற்றில் கலந்த கைக்குட்டை

கைகளுக்கு அகப்படாத கைக்குட்டை

காற்றின் கைகளில் அலைந்தோடுகிறது

காற்றில்லா நேரங்களில்

நெற்றியில் வழிந்த வியர்வையை

உறிஞ்சியெடுத்தது அதன் மென்ஸ்பரிசங்கள்

காற்று வந்து வியர்வை துடைத்த பொழுதில்

காற்றின் குழந்தையாகிப் பறந்து செல்கிறது

ஒருவேளை காற்றுக்கு வியர்க்கலாம்

வியர்க்கும் காற்றுக்கு கைக்குட்டை

வியர்வையைத் துடைத்து விடலாம்

காற்று கவர்ந்து சென்றது போன்ற கைக்குட்டையைப்

பின்னாட்களில் கடை கடையாகத் தேடிப் பார்த்தேன்

ஓர் அபூர்வமான கைக்குட்டையைத்தான்

காற்று கவர்ந்து சென்றிருக்கிறது

அன்றிலிருந்து எத்தனையோ கைக்குட்டைகளைக்

காற்றில் தவற விட்டுப் பார்க்கிறேன்

தவற விட்ட பொருட்களை அலையில்

கொண்டு வந்து சேர்க்கும் கடலைப் போல

காற்று கைகளில் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது

காற்றுக்குப் பிடித்தது போன்றதோரு கைக்குட்டையை

என்னால் கடைகளில் வாங்க முடியவில்லை

*****

10 children and 11 dosas

10 children and 11 dosas

Even in times of famine

Mother of ten children will bake eleven dosas

After giving

Ten dosas for children

Eleventh dosa for husband

Twelfth Spontaneously

She will lonely taste her hunger

*****

10 பிள்ளைகளும் 11 தோசைகளும்

10 பிள்ளைகளும் 11 தோசைகளும்

பஞ்ச காலத்திலும்

பத்துப் பிள்ளைகளைப் பெற்ற தாய்

பதினொரு தோசைகள் சுடுவாள்

பத்துத் தோசைகளைப் பிள்ளைகளுக்கும்

பதினோராவது தோசையை புருசருக்கும்

கொடுத்துவிட்டு

பனிரெண்டவதாகத் தானொருத்தியாக

தன்னந்தனியாகப் பசியைப் புசித்துக் கொள்வாள்

*****

24 Oct 2021

A Nail Cut By Giant

A Nail Cut By Giant

After Heavy rain when it is not raining

Mushrooms begin to hold the umbrella

When looking at mushrooms

My mother asked me if I had cut my nails

While looking surprised

As if giving meager life

A hen will come and destroy

Went to see the city strangely

The night after finishing eating mushroom food in a day

Dreamy sprouting mushrooms

Were larger than the mushrooms actually seen

Like hiding the sky

If my mother sees it

It is called the nail cut by the giant

Like Govardhanagiri hill for a thousand hens

Umbrella-like mushroom

As the stomach gets bigger

In the wake of the sudden coming

Suddenly sprouting in the dream

Mushrooms perish instantly

*****

ராட்சசன் வெட்டிப் போட்ட நகம்

ராட்சசன் வெட்டிப் போட்ட நகம்

பெய்த மழைக்குப் பெய்யாத பொழுதில்

குடை பிடிக்கத் தொடங்கி விடுகின்றன காளான்கள்

காளான்களைப் பார்க்கையில்

நகத்தை வெட்டிப் போட்டாயா என்பாள் அம்மா

ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில்

அற்ப ஆயுளைத் தருவதைப் போல

கோழியொன்று வந்து சீய்த்து விட்டுப் போகும்

நகரத்தை விசித்திரமாகப் பார்த்துச் சென்ற

ஒரு நாளில் காளான் உணவு தின்று முடித்த இரவில்

கனவில் முளைத்த காளான்கள்

நிஜத்தில் பார்த்த காளான்களை விட பெரிதாக இருந்தன

வானத்தை மறைத்து விடுவதைப் போல

அம்மா அதைப் பார்த்தால்

ராட்சசன் ஒருவன் நகம் வெட்டிப் போட்டு விட்டான் என்பாள்

ஆயிரம் கோழிகளுக்கும் கோவர்த்தனகிரி மலை போல

குடை பிடிக்கும் காளானைத்

தின்ற வயிறு பெரிதாகிக் கொண்டு போகையில்

சட்டென வரும் விழிப்பில்

கனவிலும் சட்டென முளைத்து

சட்டென அழிந்து விடுகின்றன காளான்கள்

*****

23 Oct 2021

Drinking to suck thirsty

Drinking to suck thirsty

Got to the crow

Underneath that bottle

Little water left

To rise above the water

In the frustration of not being able to put pebbles

The crow rolled the bottle and played

In the sun that began to flutter and burn

It started to evaporate a little bit

The water inside the bottle

One day to the fox

With the power to snatch the ‘vada’

The sun absorbing water for itself

The crow looked up

And the crow's thirst with bottled water

The sun was sucking and drinking

*****