23 Oct 2021

தாகத்தை உறிஞ்சிக் குடித்தல்

தாகத்தை உறிஞ்சிக் குடித்தல்

காகத்திற்குக் கிடைத்த

அந்த பாட்டிலின் அடியில்

கொஞ்சம் எஞ்சியிருந்தது தண்ணீர்

தண்ணீரை மேலெழும்ப

கூழாங்கற்களைப் போட முடியாத விரக்தியில்

பாட்டிலை உருட்டி விளையாடியது காகம்

சுள்ளென்று அடிக்க ஆரம்பித்த வெயிலில்

கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகத் தொடங்கியது

பாட்டிலின் உள்ளிருந்த நீர்

அன்றொரு நாள் நரியிடம்

வடையைப் பறிகொடுத்த ஆற்றாமையோடு

தனக்கான தண்ணீரை உறிஞ்சும் சூரியனை

அண்ணாந்து பார்த்துக் கொண்டது காகம்

பாட்டிலின்தண்ணீரோடு காகத்தின் தாகத்தையும்

உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தது சூரியன்

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...