20 Oct 2021

புணர்வின் மகிழ்ச்சி அழாதிருக்க

புணர்வின் மகிழ்ச்சி அழாதிருக்க

புணர்தலின் மகிழ்ச்சியில் பிறந்த குழந்தைகள்

அழத் தொடங்குகின்றன

தொட்டியில் ஆடும் போது

புணர்வின் இன்பத்தில் உறங்கத் தொடங்குகின்றன

விழித்தெழும் போது

புணர்வின் முடிவில் உணரும் வெறுமையுணர்ந்து

அரற்ற ஆரம்பிக்கின்றன

தோளோடு தோள் அணைத்து தட்டிக் கொடுத்து

புணர்ச்சியின் செயல்கள் எதுவும்

அமைதி தராத போது அதுவாக உறங்கிப் போகிறது குழந்தை

விழித்தெழுந்து அமைதியற்று அலைந்த

உறங்கிக் கிடந்த காமம்

உறக்கத்தில் அமைதி கொள்கிறது

உறக்கத்தைத் தேடும் பாடல்கள் பிறக்கின்றன

உறக்கத்தைத் தரும் இசை வேண்டப்படுகின்றது

தாய் தாலாட்டைப் பாடத் துவங்குகிறாள்

மீண்டும் புணர்வின் மகிழ்ச்சி விழித்தெழுந்து அழாதிருக்க

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...