பரம சுகம்
ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஐங்கரனுக்கு
இதரச் செலவினங்களுக்கான ஆபீஸ் காசு ஐநூறை அமுக்கிக் கொள்வதில் பரம சுகம்.
*****
இது அரசியல் அல்ல
"தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும்!"
என்ற தாத்தாவிடம், "போங்க தாத்தா! தப்பு செஞ்சா வழக்குதான் போடுவாங்க! தண்டனையெல்லாம்
தர மாட்டாங்க!" என்றாள் அம்முக்குட்டி.
*****
காரணம்
"இடைத்தேர்தல்லாம் ரொம்ப காஸ்ட்லி!" போட்டியிடாமல்
ஒதுங்கிக் கொண்டதற்குக் காரணம் சொன்னார் தலைவர் தங்கமணி.
*****
ஹா...ஹா...ஹா...
ReplyDelete