சொல்வதில் எதுவுமில்லை
அவனது உணவு, உணர்வு,
உறவு, உரிமை, சுதந்திரம்
சகலவற்றையும் பறித்துக்
கொண்டு
அவனைப் போராடக் கூடாது
என்றார்கள்
பாவம் அவன் என்ன செய்வான்
காறி உமிழ்ந்ததை
சளி என்று சொல்லிக்
கொண்டான்
முஷ்டி முறுக்கியதை
சுளுக்கு என்று சொல்லிக்
கொண்டான்
கண்கள் சிவந்ததை
கண் எரிச்சல் என்று சொல்லிக்
கொண்டான்
ஓங்கிய கைகளை
ஜெய ஜெய கோஷம் என்று
சொல்லிக் கொண்டான்
புரட்சி என்பதை பொழுதுபோக்கு
என்று
சொல்லிக் கொள்பவன்
தூக்கி எறிவதை ஒருநாள்
விளையாட்டு என்று நிச்சயம்
சொல்வான்.
அன்று தெரிய வரும்
உள்ளுக்குள் உறங்கிக்
கிடந்தது
எரிமலையா? எதுவுமிலையா?
என்று!
*****
ஆட்டங்களின் முடிவுகள்
உங்கள் வியாபார விளையாட்டுகள்
தொடர்ந்து கொண்டு இருக்கட்டும்
எங்கள் புண்கல் ஆறும்
நாளில்
உங்கள் ஆயின்மெண்டுகள்
உதிர்ந்து விழும்.
*****
//புரட்சி என்பதை பொழுதுபோக்கு என சொல்லிக்கொள்பவன்//
ReplyDeleteதற்கால எதார்த்தம்
எரிமலையா? எதுவுமிலையா? அழகிய சொல்லாடல் சார்
ReplyDeleteஆட்டங்களின் முடிவு
ReplyDeleteகார்ப்பரேட் விடிவு